தூத்துக்குடி: எப்போதுவென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் சோதனையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை, ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர்
சுப்பையா, தலைமை காவலர் கோபால் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் (42) என்பவரது வீட்டருகில்
உள்ள ஒரு ஓட்டு சாய்ப்பில் சோதனை செய்தனர். அங்கு 15 சாக்கு மூட்டைகளில் சட்டவிரோத விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை; றிவழகன் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி போலீசார் அறிவழகனை கைது செய்து, அங்கிருந்த ரூபாய் 8,00,000/- மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் ஏற்கனவே இது போன்று 2 புகையிலை பொருட்கள் சம்மந்தப்பட்ட வழக்கில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி எதிரியை கைது செய்து, பதுக்கி வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.
விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், எட்டயாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் உடனிருந்தனர்.