திருவள்ளூர் : பொன்னேரி மீஞ்சூர் சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மீஞ்சூர் அடுத்த திருநிலை ஏரியில் இருந்து பல ஊர்களுக்கு லாரிகளில் சவுடு மணல் கொண்டு சொல்லப்படுகிறது. மணல் ஏற்றி செல்லும் லாரிகளில் அளவுக்கதிகமான சவுடு மண் ஏற்றியும், அதிவேகமாக செல்வதாகவும், தார்பாய் போட்டு மூடாமல், திறந்தவெளியில் செல்வதாகவும், இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும், பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத்திற்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திருமதி.கல்பனா தத் மற்றும் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் மற்றும் போலீசார், பொன்னேரி அடுத்த பாலாஜி நகரில் தார்ப்பாய் மூடாமல் சவுடு மணல் ஏற்றி வந்த 4 லாரிகளை மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.