திருச்சி : விராலிமலை காவல்நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை கைதி முருகன் (22) என்பவர் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை T.R வார்டில் உள்நோயாளியாக சிகிச்சையிலிருந்து கடந்த 02.06.2020 ஆம் தேதி அதிகாலை 05.30 மணிக்கு தப்பித்துச் சென்றவரை தகவலறிந்த நான்கு மணி நேரத்தில் எ.புதூர் எல்லைக்குட்பட்ட ராமச்சந்திராநகர் எடமலைமுருகன் கோவில் அருகில் பிடித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். உதவி ஆய்வாளர் திரு.பவுல்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.நடராஜன், முதல் நிலை காவலர் திரு.செந்தில்குமார், 570, முதல் நிலை காவலர் திரு.பரமசிவம் இவர்களது சீரிய பணியைப்பாராட்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர்.ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் தக்க வெகுமதியும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார்கள்.