ஒட்டன்சத்திரம், பழனி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே புது கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடந்த செயின் பறிப்பு சம்பந்தமாக செம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில், ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி முருகேசன் மேற்பார்வையில் செம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் ஒட்டன்சத்திரம் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பெங்களூருவை சேர்ந்த ஜோதி(30), காமாட்சி(58), கோயமுத்தூர் சேர்ந்த அம்மாச்சி(37), மீனா(56) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி