தேனி : கேரளாவில் போலீஸார் நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனை செய்த 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.தமிழக- கேரளா எல்லை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கம்பம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுனில்குமார், தலைமையில், இங்குள்ள கம்பம்மெட்டு சோதனை சாவடியில், டூ வீலரில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அடிமாலிய சேர்ந்த ரகுமான் (22), வினித் (20), மற்றும் 2 சிறுவர்களை கேரளா போவீஸார் பிடித்தனர். இவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.சம்பவம் பற்றி கேரளா கம்பம்மெட்டு போலீஸார் வழக்குபதிவு செய்து நால்வரையும்கைது செய்தனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி