திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் 01.02.2022 அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளான அம்பாசமுத்திரம் வட்டம், பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சண்முகசுந்தரம் என்ற சண்முக குட்டி என்ற மதன் 21, சந்திரன் என்பவரின் மகன் கருத்தபாண்டி 21,சங்கர நாராயணன் என்பவரின் மகன் மருதுபாண்டி 27. ஆகியோர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் திரு. சந்திரமோகன் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 01.02.2022 இன்று குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.