நெல்லை: நெல்லை மாவட்டம் புகளேந்தி தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார்.இவர் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் பெற்று, அதனை அந்தந்த ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பவதும், ஏ.டி.எம். எந்திரத்தில் ஏற்படும் பழுதுகளை நீக்கும் தனியார் நிறுவனத்தின் மேலாளராக இருந்து வருகிறார்.
இவர் நேற்று குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் நிறுவனத்தின் மூலம் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த சபரீஷ் மற்றும் தோவாளை நடுத்தெருவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோர் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பணம் நிரப்பபட்ட ஏ.டி.எம். எந்திரங்களில் குறைவான பணம் நிரப்பப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வங்களில் இருந்து புகார்கள் வந்தன. இதனைதொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சபரீஷ் மற்றும் ஸ்ரீகிருஷ்ணனிடம் விசாரித்தபோது, அவர்கள் .37 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் பணத்தை தருவதாக இருவரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் இன்றளவிலும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
எனவே சபரீஷ் மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோர் மோசடி செய்த .37 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை மீட்டு, அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து கொள்கிறேன். குமரி மாவட்ட குற்றப்பரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சிதம்பரதாணு வழக்குப்பதவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.