மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பில் 37வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, தேனி ரோட்டில் அமைந்துள்ள கணவாய் செக் போஸ்டில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு தலைக்கவசம் அணிவதின் அவசியம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு சீட் பெல்ட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சாலை விபத்துகளைத் தவிர்க்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
















