தர்மபுரி: கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டு, 969 நேரடி சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 32 நபர்களுக்கான பணி நியமன ஆணையை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கலைச்செல்வன், IPS அவர்கள் வழங்கினார்.
தர்மபுரி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. புஷ்பராஜ் அவர்கள் உடன் இருந்தார்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.