திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப் அவரது உத்தரவின் படி ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி காவல் நிலைய காவல் ஆய்வாளர். ஆறுமுக நயினார் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெயிலடிச்சாம்பட்டி பிரிவில் சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துசாமி, காவலர் தீபா ஆகியோர்கள் கண்காணித்த போது அங்கு கட்டைப்பையில் கஞ்சா வைத்திருந்த பாண்டியம்மாள் வயது (54/26). க/பெ. சுப்பையா, தெற்கு தெரு, முத்தனம்பட்டி புதூர், திண்டுக்கல் என்பவரை மடக்கி பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 3.650 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காவல் ஆய்வாளர் தெரிவிக்கையில் ரெட்டியார் சத்திரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தரலாம் கஞ்சா போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















