திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கரிக்காலியில் தனியார் சிமெண்டு ஆலையின் முதுநிலை மேலாளர் திருநாவுக்கரசு (55), இவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 170 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளையடித்த மர்ம நபர்கள், அதே குடியிருப்பு பகுதியில் மேலும் 3 வீடுகளில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. அந்த குடியிருப்பில் வசிக்கிற உதவி பொதுமேலாளர்கள் செந்தில் (42), பாஸ்கர் (43) ஆகியோர் வீடுகளின் பூட்டை உடைத்து முறையே ரூ.10 ஆயிரம், ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.