திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஆத்துகுறிச்சி கீழத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இவா்களது 2ஆவது மகன் சஞ்சய் (3). அருகேயுள்ள அங்கன்வாடியில் படித்து வந்தான். திங்கள்கிழமை காலை அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்வதற்காக ரம்யா தேடியபோது சஞ்சயைக் காணவில்லை. அப்பகுதியில் உள்ள பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இது தொடா்பாக, ரம்யா அளித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீஸாா் வந்து விசாரணை செய்த பொழுது ரம்யாவுக்கும் பக்கத்து வீட்டைச் சோ்ந்த தங்கம்மாளுக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகத் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் சந்தேகத்தின் பேரில் தங்கம்மாள் வீட்டில் தேடினர். வாஷிங் மெஷினில் இருந்த சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் சஞ்சய் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கம்மாள் முன்விரோதம் காரணமாக சஞ்சயைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி, வாஷிங் மெஷினில் மறைத்து வைத்ததாக, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் சிலம்பரசன், இ.கா.ப., மற்றும் வள்ளியூர் காவல் துணை கண்காணிப்பாளர் யோகேஷ் குமாரும் விசாரணை மேற்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்