திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார் 31. இவர், கடந்த மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் 23. மைதிலி நாதன் 19. பிரேம்குமார் 24. உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி கலெக்டர் திரு.விசாகனுக்கு போலீஸ் சூப்பிரண்டு திரு.பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் விக்னேஷ் உள்பட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.