திண்டுக்கல் : திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த பூண்டு வியாபாரி சின்னத்தம்பி கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தாலுகா காவல்துறையினர் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னு (எ) விக்னேஷ், பானை(எ)மகேந்திரன், யுவராஜ் குமார் ஆகிய 3 பேரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் விசாகன் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.