திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 14.09.2022-ம் தேதி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகல் நகர், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்க மூர்த்தி 47, செபஸ்தியார்புரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் 55. கே.எம்.எஸ் நகரைச் சேர்ந்த முகமது ரபீக் 59. ஆகிய 03 நபர்களை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட லிங்க மூர்த்தி, கண்ணன், முகமது ரஃபிக் ஆகிய நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் 03 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவை தொடர்ந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் லிங்க மூர்த்தி, கண்ணன், முகமது ரஃபீக் ஆகிய 3 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா