சென்னை : சென்னை போரூர, வடபழனி ஆற்காடு சாலையில், வணிக வளாகம் எதிரே கடந்த மாதம் மளிகை கடை, பெட்டிக் கடை உள்ளிட்ட 3, கடைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு அங்கிருந்து ரூ. 8 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது. வடபழனி உதவிஆணையர் திரு. பாலமுருகன், தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் , கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அதே பகுதி அழகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் ஷெரிப் (22), கைவரிசை காட்டியது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஷெரிப்பை நேற்று இரவு காவல் துறையினர் , கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே வடபழனி, விருகம்பாக்கம் காவல் நிலையங்களில், திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.