தூத்துக்குடி : முழு ஊரடங்கு தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சட்டவிரோத மதுபான விற்பனைகளை தடுக்கும்படி அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
நேற்று (02.05.2021) ஒரே நாளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 29 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து 373 மதுபாட்டில்களும், பணம் ரூபாய் 22,950/- மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல். தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒருவரை கைது செய்து, அவரிடமிருந்து 110 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 11,000/- பறிமுதல் செய்தது, அதே போன்று நாசரேத் காவல் நிலைய போலீசார் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒருவரை கைது செய்து அவரிடமிருந்து 79 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக 28 வழக்குகள் பதிவு செய்து, 29 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 373 மதுபாட்டில்கள், ரூபாய் 22,950/- பணத்தையும் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.