மதுரை: மதுரை பத்திர பதிவு அலுவலக அலுவலர் வீட்டை உடைத்து 29 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமங்கலம் ஜவஹர் நகர் ஐந்தாவது ராஜாராம் தெருவில் வசிப்பவர் சேகர் 31.இவர், மதுரையில் மஹால் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .
சம்பவத்தன்று, குடும்பத்துடன் சாத்தாங்குடியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 29 சவரன்
தங்க நகைகள், மற்றும் பணம் ரூபாய் 50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த கொலை தொடர்பாக, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.