திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் அவர்கள் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி அவர்கள், மருந்தக ஆய்வாளர்கள், Pharma Mediacl Association, Indian Medical Association ஆகியோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து கடைகளில் மருந்து பொருட்கள் தரக்கூடாது என்றும், மருந்து கடைகளில் மருத்துவர்கள் மட்டும் பயன்படுத்தும் சர்ஜிக்கல் ஸ்பிரிட்டை பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், பொதுமக்கள் கண்டிப்பாக மருந்து கடைகளுக்கு முகக்கவசம் அணிந்து வரும்படியும், மருந்துக்கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்கவைத்து மருந்து பொருட்களை வழங்கும் படியும், மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கொடுத்து ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு அவர்களே பொறுப்பாவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறினார்கள்.
மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா