சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட 7 டாஸ்மாக் கடைகளில் உள்ள பாட்டில்கள், மானகிரியில் உள்ள குடோனுக்கு மாற்றப்பட்டபோது கண்டனூர் டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் முத்துமனோகரன் மற்றும் இளையான்குடியைச் சேர்ந்த சேல்ஸ்மேன் நாகேஸ்வரன், ஊழியர் பாண்டி ஆகியோர் மதுபாட்டில்களை குடோனுக்கு அனுப்பாமல் டாஸ்மாக் கடையிலேயே பதுக்கி வைத்திருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சாக்கோட்டை போலீசார் காரைக்குடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள் தலைமையில் அதிரடி சோதனை செய்ததில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2004 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் மேற்படி டாஸ்மாக் ஊழியர்கள் மீது u/s. 4(1)(a,a,a) TNP Act – ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்