திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி பகுதியில் வசிக்கும் 100 குடும்பத்தினருக்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.க.ஜோஷி நிர்மல்குமார் இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின் பெயரிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்களின் ஆலோசனைகிணங்க அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை காவல்துறையினர் வழங்கினர்.மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும், கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும், தேவையற்று வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா