திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். காவலர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு கையுறைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பயன்படும் வகையில் கபசுர குடிநீர் பாட்டில்களை வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா