கடலூர் : கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதிகளில் DSP திரு.நாகராஜன் தலைமையில் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்பாபு, மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.பிரசன்னா ஆகியோர்களின் மேற்பார்வையிலும் கொரோனோ வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பொதுநல அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்ட பிரமாண்ட ஆர்ச்சை பார்வையிட்டு கடைகளுக்கு வந்து செல்லும் மக்களிடம் கொரோனோவின் பாதிப்பு குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் தனித்தனியாக செயல்பட்டுவந்த காய்கறி கடைகளை தற்காலிக சந்தையாக புதிய பேருந்து நிலையத்தில் துவக்கிவைத்து முகக்கவசம் இல்லாமல் காய்கறிவாங்க வந்த பொதுமக்களுக்கு மாஸ்க் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் அம்மா உணவகத்திற்கு விசிட் செய்த DSP அவர்கள் நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையரளர் திரு.பிரபாகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ராமலிங்கம், முத்துமாணிக்கம், சுரேஷ்,குமரவேல் இவர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு விலைகளை கேட்டுக்கொண்டதோடு அங்கேயே அனைவருக்கும் இட்லி கொடுக்கச்செய்து சாப்பிடவும் செய்தார்.வந்திருந்த அனைவரும் சாப்பிடவும் செய்தனர்.
பின்னர் உணவு சமைக்கும் பெண்களிடம் கொரோனோ பாதுகாப்பு குறித்து பேசியதோடு கைகூப்பி வணக்கம் தெறிவித்துக் கொண்டார்.முன்னதாக காவல்நிலையம் மதில் சுவர் மற்றும் அம்மா உணவக சுவற்றில் வரையப்பட்ட கொரோனோ விழிப்புணர்வு ஓவியங்களை பார்வையிட்டார்.மேலும் விழிப்புணர்வு அமைப்பில் ஈடுபட்ட அனைத்து சமூக நல ஆர்வலர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களையும் தெறிவித்துக் கொண்டார்.