கடலூர் : கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில், கடலூர் சிறகுகள் குழுவில் சார்பில் வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு ஓவியம் உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக, இன்று கடலூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் சிறகுகள் குழுவை வாழ்த்தி, இந்த முயற்சிக்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
ஓவியத்தை 12 மணி நேரத்தில் வரைந்து முடித்த ஏ ஆர் ஓவிய பயிற்சி பட்டறை குழுவினருக்கும், சிறப்பாக ஒளிப்பதிவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திய m2 ஸ்டுடியோ அவர்களுக்கும், மேலும் உலகளாவிய உறவுகளுக்கு கொண்டுபோய் சேர்த்த அத்துணை ஊடக நண்பர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்