தேனி: தேனி மாவட்டம் தேவாரம் ஜமீன் சேர்ந்தவர் கொண்ட நாயுடு, இவர் கடந்த 1875 ஆம் ஆண்டு இவரது பெயரில் அன்னதான அறக்கட்டளை நடைபெற்றுவந்தது இந்த அறக்கட்டளை வாரிசுகள் என்று கூறி தேனி ராஜா களத்தைச் சேர்ந்த சிவலிங்கராஜா, சிவராசா உள்ளிட்ட 27 நபர்கள் ஜமீன்தாருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வந்தார்களாம்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், நீதிமன்ற உத்தரவை மீறியும் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தனராம்.
இதுபற்றி தேனியைச்சேர்ந்த சுப்பிரமணி மகன் கடவுள் (56) என்பவர் புகாரின் பேரில் தேனி அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.