நாகப்பட்டினம் : ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதனடிப்படையில் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அண்ணா சிலை அருகே தள்ளுவண்டியில் வைத்து காய்கறி விற்பனை செய்த பெண்ணிடம் நேரில் சென்று சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.