மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஜவுளிக்கடை பஜாரில் கீழே கிடந்த ரூ.4,00,000ஐ வடகாட்டுபட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் எடுத்து போக்குவரத்து ஆய்வாளர் திரு.ஆறுமுகம் வசம் ஒப்படைத்தார். இதை பற்றி விசாரணை செய்த உசிலம்பட்டி DSP. திரு. ராஜா அவர்கள் பணத்தை தவற விட்டதாக வந்த உசிலம்பட்டி மச்சேந்திரன் மகன் ராகேஷ் குமார் என்பவரிடம் விசாரணை செய்து பணத்தை ஒப்படைத்தார். மேலும், நேர்மையாக கீழே கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த பாண்டியை பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்