சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி தேவகோட்டை போக்குவரத்து ஆய்வாளர் திரு. ஞானதிரவியம் அவர்கள் அரசின் நான்கு சக்கர வாகனத்தில் தேவகோட்டை நகர் பகுதிகளுக்கு சென்று அப்பகுதி மக்களிடம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் அப்பகுதியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு உணவு வழங்கினார். ஆய்வாளரின் இந்த மனிதநேயமிக்க செயலை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மனதார பாராட்டினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்