திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூா் அருகேயுள்ள சிதம்பரநகரில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக தச்சநல்லூா் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளா், முத்து கணேஷ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, மூட்டைகளில் சுமார் 265 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அவற்றைக் கைப்பற்றி போலீசார் விசாரித்த பொழுது திருநெல்வேலி நகரம் லாலுகாபுரத்தில் வசித்து வரும் தீபக்குமார் (24). சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோயில் தெரு சந்தீப்குமார் (27) ஆகியோர் தங்களுடைய கூட்டாளிகளான ஓம் பிரகாஷ் (27). பரத்சிங் (45). ஆகியோரின் உதவியுடன் குட்காவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதும், 4 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பவதும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்