கரூர்: கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபட்டி பகுதியில் 27.02.20 நேற்று இரவு 8 மணி அளவில் முகத்தில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவர் இருட்டில் இரண்டு சக்கர வாகனங்களுடன் நடுரோட்டில் கீழே விழுந்து கிடந்தவரை அவ்வழியாக வந்த தனிப் பிரிவு முதல் நிலை காவலர் திரு. ஜஸ்டின் (Gr1 pc 1612) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூக்கில் அதிகமாக இரத்தம் வெளியேறி மூச்சடைப்பு ஏற்பட்டு கிடந்தவரை தனியாளாக இருந்து முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.