புதுக்கோட்டையில் : புதுக்கோட்டையில் பதவியேற்ற அடுத்த நிமிடம் முதல் அத்தனை அதிரடிகளையும் காட்டி புதுக்கோட்டையை கலக்கி வருகிறார் புதுக்கோட்டையின் புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் இ.கா.ப..
புதுக்கோட்டையில் காலை நடைபயணமாக ஒவ்வொரு நாளும் 3கி.மீ நடந்து ஒவ்வொரு இடங்களிலும் உள்ள முக்கிய பிரச்சனைகளை மிக துல்லியமாக அறிந்து அதை தீர்த்தும் வைக்கிறார். சமீபத்தில் தன்னுடைய இரவு ரோந்து பணியின் போது இரவு பணியில் இருக்கும் காவலர்கள் அவதிப்படுவதை கண்டு தன்னுடைய சொந்த செலவில் ரூ. 40,000 மதிப்புள்ள 50 கொசு பேட்களை இரவு காவலர்களுக்கு வழங்கியுள்ளார்.
புதுக்கோட்டையில் சமீபத்தில் நடைபெற்ற 300 பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு CCTVகேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்தும். தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. மாவட்ட காவல்துறைக்கு என உளவு துறை இருந்தாலும் பொதுமக்களே எனது முதல் உளவுத்துறை என்றும் அவரவர் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோதமான செயல்கள் மற்றும் மணல் கடத்தல் விபரங்களை பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.