நாகப்பட்டினம் : மாவட்ட அளவில் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் நடைமுறைபடுத்துதல் சார்ந்து பங்கேற்பு துறைகளுக்கான நிலையான செயல்படுத்தல் நடைமுறைகள் உருவாக்குதல் தொடர்பான- திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள்தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை, குழந்தை தொழிலாளர் முறை, குழந்தை திருமணம் உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உள்ளது.
குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் நடைமுறை படுத்துதல் தொடர்பாக திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்.இகாப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. சமூக பாதுகாப்பு துறையின் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திரு.P.மோகன். மற்றும் மாவட்ட குழந்தைகள் அலுவலர் திரு N.சிவக்குமார் ஆகியோர் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
குழந்தை திருமணத்தை தடுக்க
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தலைமை தாங்கி பேசினார். மேலும் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் நடைமுறைப்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பின்னர் பேசிய தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திரு.P.மோகன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திரு N.சிவக்குமார் ஆகியோர் குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், குழந்தை திருமணம் குறித்து அறிந்தால் அதனை தடுத்து நிறுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய முறைகள் குறித்தும் இந்த குழந்தைகள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்ற பங்கேற்பவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் குறித்தும் மற்றும் இளைஞர் நீதி சட்டம் தொடர்பாக பேசினார். குழந்தைகளை சட்டப்படி ஒவ்வொரு சமூக வாதிகளும் பாதுகாக்க வேண்டும் எனவே இவ்வாறாக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பயிற்சியின் போது அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் குழந்தை பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குழு பணியாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வலர்கள்,நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என சுமார் 140 பேர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்