திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் அம்பலூர் காவல் நிலையத்தில் 1997 ஆம் ஆண்டு ராஜா என்பவர் மீது கொள்ளை வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு நீதிமன்ற நடவடிக்கையில் இருக்கும் போது குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 25 வருடங்களாக பிடிக்கட்டளை நிறைவேற்றப்படாமல் தலைமறைவாக இருந்தகுற்றவாளியை அம்பலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பிடி கட்டளை நிறைவேற்றியுள்ளார். இத்தகைய சிறப்பான செயல் செய்தமைகாக. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்., BVSc, அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி, மேலும் பணியை சிறப்பாக செய்ய அறிவுரைகள் வழங்கி ஊக்குவித்தார்.