தூத்துக்குடி:தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாகன தடுப்பு சோதனை மையத்தில் ஆய்வு செய்த அவர் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இரவு பத்து மணியிலிருந்து எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எல்லோருக்கும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.
தேவையில்லாமல் சுற்றித்திரிப்பவர்களின் வாகனங்கள் வந்து பறிமுதல் செய்து இருக்கிறோம். அத்தியாவசிய பணிகள் மற்றும் மருத்துவம் போன்ற பணிகளுக்கு செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் வாகன தடுப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து 64 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளன என்றார்.இது தொடர்பாக 25ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.