செங்கல்பட்டு : இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாமல்லன் சிலை அருகே மாமல்லபுரம் காவல் துறை மற்றும் AVIT கல்லூரி மாணவர்கள் இணைந்து போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கும் அவசியம் மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் திரு. ரவிக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் மாமல்லபுரம் காவல் உதவி ஆய்வாளர் திரு.சதாசிவம் , போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் , AVIT கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.