திருவள்ளூர் : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி,காவலர் குடியிருப்புகள் வேண்டிய விண்ணப்பங்களை இனிவரும் காலங்களில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வசதியாக WWW. policequarters.org என்று முகவரி ஜனவரி 26 முதல் அமல்படுத்தப்படுகிறது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள் குடியிருப்புகள் வேண்டிய விண்ணப்பிக்கலாம், அதில் காலியாக உள்ள குடியிருப்புகள் வேண்டி விண்ணப்பிக்கலாம், காத்திருப்பு பட்டியல் வரிசை எண் தனிநபரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு SMS மூலம் தகவல் அனுப்பப்படும், காத்திருப்பு பட்டியல் வெளிப்படைத்தன்மை உறுதியாகும், மூப்பு அடிப்படையில் தனிநபரின் விருப்பத்தின்படி வீடுகளை தெர்வு செய்ய முடியும், இவ்வாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்