சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திருஅ.கா.விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் 16.01.2020 ,இன்று தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி வளாகத்தில் சுமார் 600 காவல்துறை குடும்பங்கள் கலந்து கொண்ட பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விஸ்வநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமை தாங்கினார்கள் .
இவ்விழாவில் மண் மணம் கமழும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் காவல்துறை குடும்பத்தினர் மிகுந்த ஆர்வத்துடன் உற்சாகமாக பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற காவல்துறை குடும்பத்தினர்களுக்கு பரிசுகளையும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் இனிப்புகளையும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் திரு.A.அருண் இ.கா.ப., போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி ஜெயகௌரி இ.கா.ப., போக்குவரத்து வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் முனைவர் திரு கே ராஜசேகரன் இ.கா.ப., மற்றும் போக்குவரத்து மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.எம்.எம்.அசோக்குமார் ஆகியோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.