செங்கல்பட்டு : ஜனவரி முதல் வாரம் நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகேந்திரா ரிசர்ச் வேல்யூ சார்பில் கொலம்பஸ் பள்ளி மற்றும் மகேந்திரா வேர்ல்ட் பள்ளி மாணவர்கள் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு ஊர்வலமாக சென்றனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தெ.கண்ணன் அவர்கள் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் மாணவர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவ மாணவியருக்கு சாலை போக்குவரத்து விதிகள் பற்றியும், அவற்றை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவரித்து அறிவுரை வழங்கினார்.