செங்கல்பட்டு : கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஜூனியர் பிரிவில் முதல் பரிசினைப் பெற்ற முசரவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி செல்வி. வஜ்ஹத் பர்வீன் இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் BE அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும் கடந்த மாதம் தாம்பரத்தில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற நாயக்கன் பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சுரேந்திரன், ஷாம், அருள்பிரகாஷ் , சதீஷ் குமார் மற்றும் ஹரிஷ் ஆகியோரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் வட்டார கல்வி அலுவலர் திரு.சிவசங்கரன் , வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.பழனி, முசரவாக்கம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.சுசீலா ஆசிரியர்கள் திருமதி.வசந்தி, திரு.செல்வவிநாயகம் மற்றும் கராத்தே பயிற்சியாளர் திரு.K.முரளி ஆகியோரும் கலந்து கொண்டனர்.