திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்தரவின்பேரில் (01/05/2023) மாவட்ட முழுவதும் 09காவல் உதவி ஆய்வாளர்கள் 33 காவல்துறையினர் கொண்ட குழு மாவட்டம் முழுவதும் நடத்திய மதுவிலக்கு சோதனையில் மொத்தம் 23 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இதில் 2000 லிட்டர் சாராய ஊறல், 123 லிட்டர் கள்ளச்சாராயம், 855 லிட்டர் கர்நாடகா மது பாக்கெட்டுகள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 குற்றவாளிகளை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மதுவை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்கள் தெரிவித்துள்ளார்.