திருநெல்வேலி : மதுரை to கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்களிடம் சிவகிரி காவல்துறையினர் வெற்றிலை மண்டபம் அருகில் வைத்து பக்தர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.அதில் இரவுநேரங்களில் சாலையின் இடது பக்கமாக நடந்து செல்ல வேண்டும் எனவும் கூட்டமாக நடந்து செல்லக் கூடாது எனவும் இரவு நேரங்களின் போது டார்ச்லைட் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் நீங்கள் அணிந்திருக்கும் பைகள் மற்றும் கம்புகளில் REFLECTION STICKER ஒட்ட வேண்டும் எனவும் மேலும் ஏதேனும் அவசர உதவிக்கு 100 அழைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்