சேலம்: சேலம் மாநகர காவல்துறையின் சார்பில், காவலன் எஸ் ஓ எஸ் (KAVALAN SOS APP)செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 20.12.2019 ஆம் தேதி சேலம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெற்றது.
இவ்விழாவில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T. செந்தில்குமார் IPS., அவர்கள் கலந்துகொண்டு காவலன் எஸ் ஓ எஸ் (KAVALAN SOS APP ) செயலியின் செயல்பாடுகள் குறித்தும், பதிவிறக்கம் செய்வது குறித்தும், அதன் பயன்கள் குறித்தும், மாணவிகளிடையே விரிவாக எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியின் போது சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.P.தங்கத்துரை மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையாளர் திரு.M.சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திருமதி. சூர்யா பிரியா
சேலம் மாவட்ட தலைவி
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா