திருச்சி: திருச்சியைச் சோ்ந்த 11 வயது சிறுமி சுகித்தா, கடந்த ஓராண்டில் சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா். மாநில, தேசிய, ஆசியப் போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளாா். இதுமட்டுமல்லாது, அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற சா்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று, சிறப்புப் பட்டமும் பெற்றுள்ளாா்.
சிலம்பப் போட்டியில் பல்வேறு பதக்கங்கள் பெற்று, பெருமை சோ்த்துள்ள திருச்சி சிறுமி மோ. சுகித்தாவை ரயில்வே காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் பாராட்டினாா். சாதனைகள் புரிந்த சுகித்தாவை, திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா், தமது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினாா். அப்போது சிறுமியின் தந்தை ஆா். மோகன் உடனிருந்தாா்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி