திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறார்.
மாவட்டத்தில் ஏற்படும் சாலை விபத்துகளினால் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வரும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படி மாவட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். இதன்படி 04.02.2022 முதல் 06.02.2022 வரை வாகன தணிக்கையில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறையினர் இதுவரை மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 22 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 20 இருசக்கர வாகனங்கள், 1 நான்குசக்கர வாகனம், 1 லாரி பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.