குமரி: குமரிமாவட்டத்தில்ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு:பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இன்று தக்கலை, நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2059 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.