கடலூர்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, S. ஏரிப்பாளையம் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அவர், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வாக்குப்பதிவு நாளில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் காவல் பணியாளர்களின் பணிப்புரைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
















