மதுரை: 2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் மற்றும் ஆவடி படை பயற்சி மையத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 11 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் மற்றும் 4 சிறப்பு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 24 குழுக்கள் கலந்துகொண்டன. போட்டிகளில் 1)SCIENTIFIC AIDS TO INVESTIGATION , Lifting and Packing காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயலட்சுமி ஊமச்சிகுளம் (AWPS) வெண்கலம் பதக்கமும், 2) Finger Print போட்டியில் M.கவிதா சார்பு ஆய்வாளர் T.கல்லுப்பட்டி வெள்ளிப் பதக்கமும், 3)Programming Ability (Team event) திரு. தமிழ்மணி தலைமை காவலர், திருமதி.சஹாயா லலிதா முதல்நிலை காவலர் ஆயுதப்படை ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சங்கர் ஜிவால்., இ.கா.ப அவர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார்.