திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை (21.12.2025) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள 2 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வினை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, எழுத்து தேர்வு பணியில் ஈடுபடும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு தேர்வு நடைமுறை தொடர்பாக விளக்கங்களும், அறிவுரைகளும் இன்று (20.12.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் எடுத்துரைக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















