திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன், அவர்களின் உத்தரவின்பேரில் வாணியம்பாடி அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் அடங்கிய காவல்துறையினர் திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொரிப்பள்ளம் மலைப்பகுதியில் மதுவிலக்கு வேட்டை நடத்தி சுமார் 2000 லிட்டர் சாராய ஊறல்களை அழித்ததோடல்லாமல் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய அனைத்து பொருள்களையும் அழித்தனர்.