காஞ்சிபுரம் : பெண்களின் உடல்நலம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ரோட்டரி கிளப் சென்னை அறக்கட்டளை மற்றும் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய நடத்தப்பட்ட மார்பக புற்றுநோய் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இந்த முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் துவக்கி வைத்து முகாமில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றினார். உலகம் முழுவதும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிக அளவில் கர்ப்பக புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக பரவிய பிறகு நோய் கண்டறிந்து சிகிச்சைக்காக வருபவர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களை நோயிலிருந்து காப்பாற்றுவது அரிதாக உள்ளது, ஆகையால் இந்த வகை புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்த தொண்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர், அந்த வகையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, தனியார் நிமிர்ந்து நில் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி சங்கம் சென்னை டவர் சார்பில் மகளிர் நலம் என்ற பெயரில் சிறப்பு முகாம் நடத்தினார். இதில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உடல் பருமன் ரத்த அழுத்தம் சார்ந்த இரத்த சோகை, நீரழிவு போன்ற தொற்றா நோய் மற்றும் அதில் அதிக அளவில் பாதிக்கப்படும் கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்று நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ள இலவசமாக மகளிர் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் திரு.மனோகரன், திரு.முத்து, திரு.முருகன் மற்றும் திருமதி.பிரியா Director of the Aringar Anna institute Dr Srinivasan and Rotary club members ( Tamil) ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்